.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, October 31, 2008

சட்ட விரோதமாக இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை இனங்காண நடவடிக்கை.


சட்ட விரோதமாக இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தனிபட்ட முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறும் நபர்கள் தொடர்பான விபரங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு தெரியப்படுத்துமாறு பணியகம் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.


தனிப்பட்ட நபர்கள் சிலர் இணைந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட நடைமுறை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அந்த பணியகத்தின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான சரியான தகவல்களை தருபவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசுக்கள் வழங்கப்படவுள்ளதாக அந்த பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: