.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, October 25, 2008

அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது


சென்னையில் வைத்து கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள நபரொர் மற்றும் குறித்த இலங்கையர் ஆகியோர் இந்த கடனட்டை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை போலி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செந்தூரன் என்ற இலங்கையரும், குமார் என்ற கணனி இந்தியருமே கடனட்டை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசடியான முறையில் கடன் அட்டை பயன்படுத்தப்படுவதாக கண்டறிந்த தனியார் வங்கியொன்று வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் இந்தியர் தலைமறைவாகியுள்ளார்.

No comments: