.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, October 28, 2008

தமிழகத் தலைவர்களின்; போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு உற்சாகம் தருகிறது-பிரபாகரன்


இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆயுதங்களையும் இராணுவப் பயிற்சிகளையும் வழங்கி வருவது தமக்கு மனத் துயரத்தைத் தருவதாக விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்துள்ளார். இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:விடுதலைப் புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஒரு தேசியவாதி. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் அடக்கு முறைக்கெதிராக குரல் கொடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குவதற்கான வழி வகைகளையும் உருவாக்கித் தந்துள்ளார்.

இதற்காக முதல்வருக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தமிழகத் தலைவர்களின் போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு பலத்தையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்
மூலம் - ஈ-NEWS


No comments: