.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, October 25, 2008

அரச படைகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் தகப்பனும் மகனும் பலி


கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புப் பகுதியில் இலங்கைப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பாடசாலை ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
புதுமுறிப்பு தெற்குப் பகுதியில் நேற்று மாலை இலங்கை அரச படையினர் தொடர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 65 வயதுடைய சின்னையா இராமலிங்கம் மற்றும் அவரது மகனான இராமலிங்கம் விஜயானந்தன் ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.
சின்னையா இராமலிங்கம் அக்கராயன் கூட்டுறவுச்சங்கத்தின் முன்னாள் முகாமையாளராவார். அத்துடன் அவரின் மகனானஇராமலிங்கம் விஜயானந்தன் வன்னேரிக்குளம் ஐயனார்புரம் பாடசாலை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: