.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, October 31, 2008

இலங்கைத் தமிழர்களுக்காக நிபந்தனைகளுடன் உண்ணாவிரதத்தில் குதிக்க ரஜினி, கமல் இணக்கம்


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளைய தினம் சென்னையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முன்னணி நட்சத்திரங்களான ரஜனியும் கமலும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


இவர்கள் இருவரும் ஒரு நிபந்தனையுடனேயே சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் மைக் வைத்து பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனையாகும். இதே நிபந்தனையை தமிழக அரசும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதால், அதனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே தவிர்க்குமாறு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.


இந்த யோசனைக்கு கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தங்களை பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளதாக, நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்த்தில் பேசாது இருக்கத் தீர்மானித்துள்ளதாக நடிகர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர்.

No comments: