.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, October 28, 2008

ஐக்கிய நாடுகள் அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.


மன்னாரிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு சொந்தமான அலுவலகம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.


அத்துடன், ஒரு தொகை வெடிப்பொருட்களும் அந்த அலுவலகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


குறித்த அலுவலகத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிவில் இன்று காலை 10 மணியளவில் மறைத்து வைத்திருந்த இந்த வெடிப்பொருற்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

No comments: