.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, October 27, 2008

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை..


வெள்ளவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்துகொள்ளப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


குறித்த நபர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் உள்ள சிறைக் கூடத்தில் வைத்து சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.


தற்கொலை செய்து கொண்ட நபர் திருகோணமலையில் வைத்து தீவிரவாத ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தவேளையில் அவர் பல தகவல்களை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


அவர் வழங்கிய தகவல்களை அடுத்தே வெள்ளவத்தை பிரதேசத்தில் தற்கொலை குண்டுதாரி அணியும் அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

No comments: