.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, October 26, 2008

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள வாகரை பகுதியில் புலி உறுப்பினர் ஒருவர் கைதாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்


வாகரை பிரதேசத்தில் வைத்து தமிழர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸார் இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறினார்.
வாகரை பிரதேசமானது இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டுவந்துள்ளதாக கூறிக்கொண்டு வருகின்ற போதிலும் அங்கு விடுதலைப் புலிகளின் ஊடுருவல் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: