.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, October 25, 2008

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை தாக்குதல்.


வவுனியா – குருக்கள் புதுக்குளம் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு பிரயோகம் இடம்பெற்றுள்ளது.


இன்று அதிகாலை 3.30 அளவில் இந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.


குறித்த பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டதாகவும், அதனை தொடர்ந்து அதிரடி படையினர் பதில் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: