இலங்கையில் நடைபெறும் தமிழர் பிரச்சினையை கண்டித்து தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி முழு கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றுவரும் இனப் பிரச்சினைக்கும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரியும் இந்தக் கடையடைப்பு நடத்தப்படுவதாக தமிழக வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தமிழ் மக்களின் உயிரோடும், உணர்வோடும் தொடர்புடைய போராட்டம் என்பதால் இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதிவிலக்கு வழங்கப்படாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகச் சிறிய தேனீர் கடை முதல் மிகப்பெரிய நகைக்கடைகள் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் ஒக்டோபர் 31ஆம் திகதி அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment