.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, October 30, 2008

சம்பள உயர்வு கோரி ஆசிரியர் சங்கங்கள் ஒரு நாள் சுகவீன விடுமுறை பேராட்டம் ஒன்றில் ஈடுபட்டு;ள்ளனர்.


அதிபர் மற்றும் ஆசியர்களில் சம்பள உயர்வு கோரி ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் சுகவீன விடுமுறை பேராட்டம் ஒன்றில் ஈடுபட்டு;ள்ளனர்.


இந்த சுகவீன விடுமுறை போராட்டத்தில் 12 ஆசிரியர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர்களின் சம்பள உயர்வு போராட்டமானது மாணவர்களின் கல்வி நடவடிக்கையை சீர் குழைப்பதை நோக்கமாக கொண்டதல்ல எனவும் ஆசிரியர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் எனவும் ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


இதேவேளை, இந்த வேலை நிறுத்த போராட்டமானது வருட இறுதியில் நடைபெறவுள்ள பரீட்சைகளை பாதிக்காதென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள தவணை இறுதி பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர சதாரண தர பரீட்சை ஆகியன திட்டமிட்டப்படி நடைபெறுமென கல்வி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments: