
ஈரான் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை வட்டியற்ற கடனில், இலங்கைக்கு வழங்க உள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஈரானிய அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைக்கு அமைய இந்த எரிபொருள் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
ஈரானிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் வட்டியில்லா கடனை மூன்று மாதங்களில் பின்னரே திரும்பச் செலுத்த வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அரசாங்க நிறுவனங்கள் நீண்டகால கடனடிப்படையில் பெற்றுக் கொண்ட கடனை திருப்பி செலுத்தாததனால், ஏற்பட்டுள்ள சீரற்ற நிதி நிலைமையினை சீர்செய்ய முடியும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment