.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, October 30, 2008

----கட்டுரை----....விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலால் 9ஆவது தடவையாக அரசுக்கு தோல்வி...


28.10.2008 அன்று விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக வான் தாக்குதலை மேற்கொண்டு விட்டு பாதுகாப்பாக திரும்பினர். விடுதலைப் புலிகளின் இந்த தாக்குதலை மூக்கின் மேல் விரல் வைத்து வியந்து பார்த்துக் கொண்டுடிருக்கிறது.


வாயால் மாத்திரம் யுத்தத்தில் வெற்றி பெற்று வரும் அரசு மற்றும் அரச தரப்பு உயர் அதிகாரிகள் அனைவரும் அன்றைய தினம் ஆச்சரியப்பட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.20 அளவில விமானத்தின் மூலம் கொழும்புக்குள் புகுந்த விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக தாக்குதலை மேற்கொண்டனர்.


எனினும் அவர்களது இலக்கு தவறிவிட்டது என்றே கூறவேண்டும். ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக மக்களுக்கோ அல்லது மக்களின் சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களால் குறித்த இலக்கை அடைய முடியாது போனபடியால் என்னவோ அவர்கள் களனி திஸ்ஸ மின்மாற்றி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள். மக்கள் பாவனைக்கான மின் விநியோகத்தை தடை செய்வது அவர்களது இலக்காக இருக்கா!
என்றபோதிலும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் அரசுக்கு பாரிய நட்டம் என்றே கூறவேண்டும். களனி திஸ்ஸ மின் நிலையத்தை சீரமைக்க குறைந்த பட்சம் 6 மாத காலமாவது எடுக்கும் என பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அத்துடன் கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக மார்பில் தட்டிக் கொள்ளும் அரச பாதுகாப்பு செயலகப் பிரிவினருக்கு, விடுதலைப் புலிகளின் இந்த விமானத் தாக்குதலானது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் விடுதலைப் புலிகள் கொழும்பில் வந்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு மீண்டும் அவர்களது இலக்கு நோக்கி பாதுகாப்பாக சென்றடைந்தமையானது அரசுக்கு படு தோல்வி என்றே கூறவேண்டும். மேலும் அரசாங்க பாதுகாப்பு விவகாரத்தில் பெரும் குறைப்பாடுகள் இருக்கின்ற அறிகுறியையே காட்டி நிற்கிறது.


விடுதலைப் புலிகள் தோல்வியடைந்துவிட்டதாக வாயால் கூறிவரும் அரக்கு விடுதலைப் புலிகள் சரியான பதிலை கொடுத்துவிட்டார்கள் என்றே கூறவேண்டும். விடுதலைப் புலிகளின் 9வது வான் தாக்குதலால் அரசு மௌனம் காத்து வருகிறது. எவ்வித அறிக்கையோ அல்லது கருத்துக்களையோ அரச தரப்பு கூறவில்லை. காரணம் அவர்களுக்கு இந்த தாக்குதல் பெரும் தோல்வியையே கொண்டு வந்துள்ளது.


இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகள் தள்ளாடி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர். அதில் அரசுக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறைந்த பட்சம் 6 பேராவது உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்ட போதிலும் சுமாராக ஒருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக படைத் தரப்பு கூறியது. அந்த தாக்குதலிலும் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும் அதன் முழுவிபரத்தையும் அரசாங்கம் மூடிமறைத்துள்ளது. அதுகுறித்து கூறும் போது கூட பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு பிரதான காரணம் தான் அரசாங்கம் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.


இந்த நிலையில் வன்னியில் இருக்கும் மக்களின் நிலைமை இனி பெரும் பாடாகத்தான் இருக்கும். ஏனென்றால் இனி அரசு இந்த கோபத்தை எல்லாம் தீர்ப்பது அப்பாவி மக்களிடம் தானே. இன்றும் கூட (30.10.2008) வன்னி பிரதேசமான கிளிநொச்சி புதுகுடியிருப்பு பகுதியில் இலங்கை விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டன. அரச தரப்பு கூறுகிறது தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக அந்த வெற்றியானது பொது மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மீது வான் தாக்குதல் நடத்துவதா என்ற கேள்வியும் மனதில் தோன்றுகிறது.

No comments: