
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சேர்ந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தாக்கலை லஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவர், மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு எதிராக நடைபெறும் லஞ்சம் பெற்றமை தொடர்பான வழக்கின் முக்கிய பெண் சாட்சியாளரை தடுக்கும் நோக்கில், சாட்சிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment