
இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி பிரவேசித்த 5 இலங்கைத் தமிழ் இளைஞர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள வலப்பாடு என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கடலோர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மேலதிக விசாரணைக்காக மண்டபம் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment