இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னேரிக்குளம் பகுதியில் பரஸ்பர மோதல்கள் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் 4 இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் பாதுகாப்பு படையினர் அப்பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது 3 சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினரால் மீட்கப்பட்ட இந்த சடலங்கள், மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சடலங்களை பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதவான் வு.யு. பிரபாகரன் பிரேத பரீசோதனையின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வெள்ளிகிழமை இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த மற்றுமொரு விடுதலைப் புலி உறுப்பினரின் சடலமொன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமும் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலங்களில், பெண் விடுதலைப் புலி உறுப்பினரின் சடலமொன்றும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment