.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, October 26, 2008

இலங்கை மீனவர் 15 பேர் இந்தியாவில் கைது


இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 15 பேர் இந்திய கடலோர காவல் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடலோர காவல் பிரிவினர் நேற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பாண்டிச்சேரி கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 இலங்கை படகுகளையும், மசூலிப்பட்டினம் அருகே ஒரு இலங்கை படகையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த 3 படகுகளிலும் மொத்தம் 15 சிங்கள மீனவர்கள் இருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களை கடலோர காவல் பிரிவினர் ராயபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய படகுகளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இந்திய கடலோர காவல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களை பொலிஸார் கைது செய்து, இலங்கை மீனவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தெரிவிக்;கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: