
இலங்கையில் பாதிப்படைந்துள்ள தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வேண்டுக்கோள் விடுத்ததிற்கினங்க தமிழகத்தில் 26 லட்சம் ரூபா நிதி சேர்ந்துள்ளது.
இந்த 26 லட்சம் ரூபா தொகை இன்றைய தினம் சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் இந்திய தமிழர் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு தேவையான அத்தியவசிய பொருற்களை தமிழகம் வழங்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் விடுத்த வேண்டுக்கோளுக்கினங்கவே இந்த நிதி சேர்க்கப்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தனது சொந்த தொகையிலிருந்து 10 லட்சம் ரூபா செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment